ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

உலகளவில் கரோனா பாதிப்பு 6.73 கோடியைத் தாண்டியது

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 6.73 கோடியைத் தாண்டியுள்ளது. 

News image

Globally, corona damage exceeds 6.73 crore

Updated On :7 டிசம்பர் 2020, 6:00 am

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 6.73 கோடியைத் தாண்டியுள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சீனாவில் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவி பல்வேறு பாதிப்பைகளை  ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு பாதித்தோர் எண்ணிக்கை 6,,73,93,283 ஆக உயர்ந்துள்ளது. அவா்களில் இதுவரை 15,41,747 போ் தொற்று நோய்க்கு உயிரிழந்துள்ளனா். 

மேலும், 4,65,84,229 போ் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 1,92,67,307 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,06,229  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகில் கரோனா தொற்றுக்கு மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை  1,51,59,529 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,88,906 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த்துள்ளனர். 8,85,5,93 பேர் குணமடைந்துள்ளனர், 6,01,5,030 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 26,448 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  

இந்தியா 9,67,7,203 தொற்று பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 1,40,590 ஆக உள்ளது. இதுவரை 9,13,9,901 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.