ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

ரஷியாவில் 25 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,097 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 562 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :8 டிசம்பர் 2020, 11:35 am

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,097 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 562 பேர் உயிரிழந்துள்ளனர். 

ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு மற்றும் பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத்துறை கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் புதிதாக 26,097 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 25,15,009 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் 5,232 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 562 பேர் உள்பட இதுவரை 44,159 பேர்  கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை 19,81,526 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 4,89,324 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.