இந்தியா - நேபாளம் இடையே விமானப் போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இருநாட்டு தலைநகர்களான தில்லி - காத்மண்டு இடையே நாளொன்றுக்கு ஒரு விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு விமான சேவையைத் தொடங்குவது குறித்து நேபாளத்திற்கு மத்திய அரசு சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், தற்போது நேபாள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்காலா, நேபாளத்திற்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இரு நாட்டு மக்களுக்கிடையேயான போக்குவரத்து தொடர்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கிடையே இயக்கப்படும் விமானசேவையில், உரிய விசா வைத்திருப்பவர்களும், இரு நாட்டு குடிமக்களும் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்படடுள்ளது.
தில்லியிலிருந்து காத்மண்டுவிற்கு ஏர் இந்தியா நிறுவனம் விமானத்தை இயக்கவுள்ளது.
கரோனா தொற்றால் கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. எனினும் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் சிக்கியிருந்த நபர்களை மீட்டு வர விமானங்கள் இயக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


