வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

பாகிஸ்தானில் புதிதாக 3,138 பேருக்குத் தொற்று; மேலும் 56 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,138 பேர் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் ஒரேநாளில் 56 பேர் பலியாகியுள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :10 டிசம்பர் 2020, 1:21 pm

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,138 பேர் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் ஒரேநாளில் 56 பேர் பலியாகியுள்ளனர். 

இதனால், பாகிஸ்தானில் மொத்த பாதிப்பு 4,29,280 ஆகவும் மொத்த உயிரிழப்பு 8,603 ஆகவும் உயர்ந்துள்ளது. 

அதேசமயத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 3,74,301 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 46,376 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2,575 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். 

மாகாணவாரியாக பாதிப்பு

சிந்து - 189,687, பஞ்சாப் - 125,250, கைபர்-பக்துன்க்வா- 50,762, இஸ்லாமாபாத் - 33,695, பலுசிஸ்தான்- 17,604, கில்கித்-பல்திஸ்தான்- 4,765 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்- 7,517 பேர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.