11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 4.32 லட்சமாக உயர்வு!

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,047 பேர் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 432,327 ஆக அதிகரித்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :11 டிசம்பர் 2020, 9:13 am

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,047 பேர் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 4,32,327 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் ஒரேநாளில் 50 பேர் உள்பட மொத்த உயிரிழப்பு 8,653 ஆகவும் உயர்ந்துள்ளது. 

அதேசமயத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 3,79,092 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 44,582 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2,538 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 42,596 மாதிரிகள் உள்பட இதுவரை 59,48,742 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

மாகாணவாரியாக பாதிப்பு

சிந்து - 1,91,246, பஞ்சாப் - 1,25,897, கைபர்-பக்துன்க்வா- 51,172, இஸ்லாமாபாத் - 34,014, பலுசிஸ்தான்- 34,014, கில்கித்-பல்திஸ்தான்- 4,770 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்- 7,578 பேர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.