11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 16 லட்சத்தைத் தாண்டியது

உலகளவில் கரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 16 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

News image

The number of corona victims worldwide has surpassed 16 million

Updated On :12 டிசம்பர் 2020, 6:25 am

உலகளவில் கரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 16 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

சனிக்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் ஒட்டுமொத்தமாக 7,14,38,628 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் இதுவரை 16,01,197 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனாவிலிருந்து 4.96 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.  சுமாா் 2,01,99,097 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,06,595  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகில் கரோனா தொற்றுக்கு மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 1,62,95,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,02,750 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 9,50,7,419 பேர் குணமடைந்துள்ளனர், 6,48,5,289 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 27,324 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில்இதுவரை 98,27,026 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதே நேரத்தில் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 1,42,662ஆக உள்ளது. இதுவரை 93,24,328 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.