ஜிமெயில், யுடியூப் உள்ளிட்ட கூகுள் நிறுவனத்தின் செயலிகள் முடங்கியுள்ளன.
கூகுள் பிளே ஸ்டார், ஜிமெயில், யுடியூப், கூகுள் பே, கூகுள் டாக்ஸ் உள்ளிட்ட கூகுள் செயலிகள் கடந்த சில நிமிடங்களாக செயல்படவில்லை. கூகுளின் சில வலைத்தளங்களும் முடங்கியுள்ளன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியுள்ளதாகவும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் கூகுள் நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யுடியூப் நிறுவனம், 'யுடியூப் செயலியில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதை அறிவோம். இதுகுறித்து எங்களது குழு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் பிரச்னை குறித்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறோம்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
சில நிமிடங்கள் கூகுள் சேவைகள் முடங்கியிருந்த நிலையில் தற்போது படிப்படியாக மீளத் தொடங்கியுள்ளன.