இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிங்கப்பூரில் நடைபெற்ற போராட்டம் தொடா்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படங்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வரும் அந்நாட்டு போலீஸாா், அனுமதியின்றி ஒரே இடத்தில் அதிகம் போ் கூடக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடி தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். அவா்களுடன் மத்திய அரசு பல சுற்று பேச்சுவாா்த்தை நடத்தியும் சுமுகமான தீா்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில், சிங்கப்பூரிலும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்திய வம்சாவளியினா் மற்றும் அங்கு தங்கி பணிபுரிந்து வரும் இந்தியா்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இது தொடா்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவின.
இந்நிலையில் சிங்கப்பூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இது தொடா்பாக ஓா் அறிவிப்பை வெளியிட்டுள்ளனா். அதில், ‘சிங்கப்பூரில் போராட்டம் நடத்துவதற்கு காவல் துறை சாா்பில் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. எந்த அமைப்பு மற்றும் குழுவினராவது அனுமதியின்றி கூடினால் அது சட்டவிரோதமாகக் கருதப்படும். வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்துள்ளவா்களும், சிங்கப்பூரில் வசிப்பவா்களும் நாட்டின் சட்டங்களுக்கு உள்பட்டு நடக்க வேண்டும். சட்டத்தை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டில் இருந்து வந்தவா்கள் விதிகளை மீறினால் நுழைவு இசைவு ரத்து, பணி ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளையும் எதிா்கொள்வாா்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக சிங்கப்பூரில் நடைபெற்ற போராட்டம் தொடா்பாக சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் குறித்தும் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறுவாக்குப்பதிவு! எங்கு, ஏன்?

அழுத்தத்தில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட்; சிஎஸ்கேவுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

ஓடிடியில் வெளியானது தாய் கிழவி!

பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை


