11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

ஜெர்மனி: 24 மணி நேரத்தில் 952 பேர் கரோனாவுக்கு பலி

ஜெர்மனியில் புதன்கிழமை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 952 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :16 டிசம்பர் 2020, 11:17 am


ஜெர்மனியில் புதன்கிழமை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 952 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ஜெர்மனியின் மொத்த பலி எண்ணிக்கை 23,427 ஆக உயர்ந்துள்ளது. புதன்கிழமை முதல் பொது முடக்கம் அமலாகவுள்ள நிலையில் அதிகளவில் பலி எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது.

இதே காலகட்டத்தில் புதிதாக 27,728 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 13,79,238 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்வு காரணமாக அங்கு ஜனவரி 10 வரை கடுமையான பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.