பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை
பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனைக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளார்.


பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனைக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளார்.
பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் பிரதமர் இம்ரான்கான் அவசர சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். நாடாளுமன்ற அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்ட அவசரச் சட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி ஒப்புதல் வழங்கினார்.
இதன்மூலம் பாலியல் குற்றத்தில் தண்டனை பெறுபவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய மருத்துவக் குழுவால் மருந்து தரப்படும். மேலும் குற்றவாளிக்கு 10 முதல் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படவும் இந்த சட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...