ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,509 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ரஷியாவில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் புதிதாக 26,509 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 27,34,454 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 5,028 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 596 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 48,564 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை 21,76,100 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 5,09,790 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகளவில் கரோனா பாதிப்பில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


