ஆப்கனில் தலிபான் தாக்குதல்கள்: மூன்று மாதங்களில் 480க்கும் அதிகமானோர் பலி

ஆப்கனில் கடந்த மூன்று மாதங்களில் தலிபான்கள் நிகழ்த்திய பல்வேறு தாக்குதல்களுக்கு 480க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 
ஆப்கனில் தலிபான் தாக்குதல்கள்: மூன்று மாதங்களில் 480க்கும் அதிகமானோர் பலி
Updated on
1 min read

ஆப்கனில் கடந்த மூன்று மாதங்களில் தலிபான்கள் நிகழ்த்திய பல்வேறு தாக்குதல்களுக்கு 480க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து ஆப்கனின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த மூன்று மாதங்களில், தலிபான்கள் நிகழ்த்திய 35 தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் 507 குண்டுவெடிப்பு சம்பவங்கள் மூலம் 487 பொதுக்கள் பலியாகியுள்ளனர். 

1,049 பேர் காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் கொல்லப்படுவது ஒரு போர்க்குற்றம், அதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்றார். 

ஆப்கனில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அரசுக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ஆப்கனின் கஸ்னி மாகாணத்தில் உள்ள கெலன் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்த குண்டு வெடிப்பில் பொதுமக்கள் 15 பேர் பலியாகினர், 20 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com