பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருதான 'லிஜியன் ஆஃப் மெரிட்' அறிவிப்பு

பிரதமர் மோடிக்கு அமெரிக்க அரசின் உயரிய விருதான லிஜியன் ஆஃப் மெரிட் விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருதான லிஜியன் ஆஃப் மெரிட் அறிவிப்பு
பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருதான லிஜியன் ஆஃப் மெரிட் அறிவிப்பு
Updated on
1 min read

பிரதமர் மோடிக்கு அமெரிக்க அரசின் உயரிய விருதான லிஜியன் ஆஃப் மெரிட் விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உயரிய விருதாகக் கருதப்படும் லிஜியன் ஆஃப் மெரிட் அரசின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபரால் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு இந்த விருதை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

பிரதமர் மோடியின் சார்பாக அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் தரஞ்சித் சிங் சந்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையனிடமிருந்து விருதினை வெள்ளை மாளிகையில் பெற்றுக்கொண்டார்.

இருதரப்பு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு, உலகளவிலான அமைதியை ஏற்படுத்த சேவை புரிந்தமை மற்றும்  2014 முதல் 2020 ஆண்டு வரையிலான இந்தியப் பிரதமராக சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

கூடுதலாக ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com