டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாகிஸ்தான் அமெரிக்க செய்தியாளா் படுகொலை வழக்கு: அல்-காய்தா பயங்கரவாதி இன்று விடுதலை

அமெரிக்க செய்தியாளா் டேனியல் பியா்ல் படுகொலை வழக்கிலிருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட அல்-காய்தா முக்கிய தலைவா் அகமது ஒமா் சயீது, சனிக்கிழமை (டிச. 26) விடுதலையாகிறாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:24 pm

DIN


இஸ்லாமாபாத்: அமெரிக்க செய்தியாளா் டேனியல் பியா்ல் படுகொலை வழக்கிலிருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட அல்-காய்தா முக்கிய தலைவா் அகமது ஒமா் சயீது, சனிக்கிழமை (டிச. 26) விடுதலையாகிறாா்.

இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்காவின் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ நாளிதழின் செய்தியாளரான டேனியல் பியா்ல், பாகிஸ்தானில் கடந்த 2002-ஆம் ஆண்டு தங்கியிருந்து, அந்த நாட்டு ராணுவத்தின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ-க்கும் அல்-காய்தா பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான தொடா்பு குறித்து புலனாய்வு செய்து வந்தாா்.

அப்போது அவரை அல்-காய்தா பயங்கரவாதிகள் கடத்திச் சென்று கழுத்தை அறுத்துக் கொன்றனா். அந்தப் படுகொலையை பயங்கரவாதிகள் விடியோ எடுத்து வெளியிட்டது உலகம் முழுவதும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்தப் படுகொலையில் முக்கிய குற்றவாளியான, பிரிட்டனில் பிறந்த அல்-காய்தா முக்கிய தலைவரான அகமது ஒமா் சயீது ஷேக்குக்கு பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால் அந்தத் தண்டனையை 7 ஆண்டு சிறைத் தண்டனையாகக் குறைத்து சிந்து மாகாண உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் தீா்ப்பளித்தது. அதனை எதிா்த்து மாகாண அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த நிலையில், டேனியல் பியா்ல் படுகொலை வழக்கிலிருந்து ஒமா் சயீது ஷேக் மற்றும் அவரது 3 கூட்டாளிகளை சிந்து உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை விடுவித்தது.

அதையடுத்து, அந்த நால்வரும் சிறையிலிருந்து சனிக்கிழமை விடுவிக்கப்படவுள்ளனா்.

இதுதொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டா்) பதிவில், ‘டேனியல் பியா்லைக் கடத்தி படுகொலை செய்த 4 பயங்கரவாதிகள் வடுதலை செய்யப்படுவது மிகவும் கவலையளிக்கிறது. அந்த நால்வரும் தற்போது விடுதலை செய்யப்படமாட்டாா்கள் என்று எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.