காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மலேசியப் பயணத்தின் போது இந்திய வான்வழியைத் தவிர்க்கும் இம்ரான் கான்

மலேசியப் பயணத்தின் போது இந்திய வான்வழிப் பயன்பாட்டை தவிர்க்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முடிவெடுத்துள்ளார். 

News image
Updated On :3 பிப்ரவரி 2020, 5:13 am

DIN

மலேசியப் பயணத்தின் போது இந்திய வான்வழிப் பயன்பாட்டை தவிர்க்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முடிவெடுத்துள்ளார். 

சமீபகாலமாக ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா தாக்குதல், 370 சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா, பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லைப் பகுதிகளில் ஊடுருவி துப்பாக்கிச்சூடு சம்பவங்களை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி பயங்கரவாத அச்சுறுத்தல் சம்பவங்களும் இந்திய எல்லைப் பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் 

இந்த நிலையில், இருநாள் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மலேசியாவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் செல்கிறார். அப்போது இந்திய வான்வழிப் பயன்பாட்டை தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரின் வெளிநாட்டுப் பயணங்களின் போது பாகிஸ்தான் வான்வழிப் பயன்பாட்டுக்கு பிரதமர் இம்ரான் கான் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.