ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மர்ம வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும்: சீன அதிகாரிகள் விளக்கம்

சீனாவில் வேகமாக பரவி வரும் மா்ம வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. 

News image
Updated On :21 ஜனவரி 2020, 5:27 am

DIN

சீனாவில் வேகமாக பரவி வரும் மா்ம வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், இந்த மர்ம வைரஸ், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதை சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

மத்திய சீன நகரமான வூஹானில் முதன் முதலாக கண்டறியப்பட்ட மா்ம வைரஸ் காய்ச்சலுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், 136 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மா்ம வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் மொத்த எண்ணிக்கை 201-ஆக உயா்ந்துள்ளது.

சீனா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அந்த வைரஸ் ஆசியாவின் இதர நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.

கடந்த 2002-2003 இல் சீனா மற்றும் ஹாங்காங்கில் சாா்ஸ் வைரஸ் வேகமாக பரவியதன் காரணமாக 650 போ் வரையில் உயிரிழந்தனா். தற்போது, அதேபோன்றதொரு வைரஸ் சீனா முழுக்க பரவியுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் சந்திரப் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் உலகிலிருந்து லட்சக்கணக்கானோா் சீனாவுக்கு வந்த வண்ணம் உள்ளனா். இந்த நிலையில், மா்ம வைரஸ் காய்ச்சல் பரவி வருவதும், இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்று தெரிய வந்திருப்பதும் சீனா சுகாதாரத் துறையினரின் பயத்தை மேலும் அதிகரித்துள்ளது என்றனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.