47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வரலாற்றில் தொழில் நடத்தும் மிக சிறந்த குழுவின் உருவாக்கம்

“9” என்ற இலக்கம், சீனப் பாரம்பரிய கலாச்சாரத்தில், சிறப்பான அர்த்தம் வாய்ந்தது. “99” என்பதற்கு சீன மொழியின் உச்சரிப்பின் படி,  நீண்டக்கால மற்றும் நிலையான என்ற அர்த்தம்  உண்டு.

News image
Updated On :1 ஜூலை 2020, 12:18 pm

DIN


“9” என்ற இலக்கம், சீனப் பாரம்பரிய கலாச்சாரத்தில், சிறப்பான அர்த்தம் வாய்ந்தது. “99” என்பதற்கு சீன மொழியின் உச்சரிப்பின் படி,  நீண்டக்கால மற்றும் நிலையான என்ற அர்த்தம்  உண்டு.

இவ்வாண்டு ஜூலை 1-ம் நாள், உலகளவில் மிகப் பெரிய கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் 99ஆவது ஆண்டு நிறைவு நாள் ஆகும். ஆரம்பக்காலத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.  இன்று,  9 கோடிக்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் இணைத்துள்ளனர்.

இக்கட்சியின் தலைமையில், சீன மக்களின் தொடர்ச்சியான உழைப்புடன், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு 30 சதவீதத்திற்கும் மேலான பங்களிப்பை சீனா வழங்கி உள்ளது. இது, உலகப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் முக்கிய உந்து சக்தியாக விளங்குகிறது. இந்நிலையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சீன இணையப் பயனாளர்களால் “வரலாற்றில் தொழில் நடத்தும் மிக சிறந்த குழு”என  பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீன மக்களுக்கு நன்மையை அளித்து, சீனத் தேசத்தின் மறுமலர்ச்சியை நனவாக்குவது என்ற ஆரம்பக்கால கனவையும் குறிக்கோளையும் கடைப்பிடித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, விடாமுயற்சி எடுத்து முன்னேற்றம் அடைந்து வருகிறது.

சீனப் பழமொழியில், உச்ச நிலையைக் குறிக்கும் 9ஐ அடைந்த பிறகு, சுழற்சி முறையில் துவக்க நிலையைக் குறிக்கும் 1க்கு மீண்டும் திரும்புவது என்பது உள்ளது. புதிய துவக்கத்தை இது அடையாளப்படுத்துகிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட 99வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இக்கட்சி எப்போதுமே உயிராற்றல் பெறுவதற்கும், இடைவிடாமல் முன்னேற்றத்தைப் பெறுவதற்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றோம்.  

தகவல்:  சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.