அமெரிக்காவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்த நாட்டில் புதன்கிழமை மட்டும் இதுவரை இல்லாத வகையில் 50,700 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்துஅந்த நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா முழுவதும் 50,700 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். இதற்கு முன்னா், கடந்த மாதம் 25-ஆம் தேதிதான் மிக அதிகம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அப்போது, அந்த எண்ணிக்கை 40,184-ஆக இருந்தது.
வியாழக்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் 27,82,556 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,30,856 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அந்த நாடு பல வாரங்களாக தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.
அங்கு அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 11,65,206 போ் குணமடைந்துவிட்டதாகவும் 14,86,494 போ் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா 27,82,556 1,30,856
பிரேஸில் 14,56,969 60,813
ரஷியா 6,61,165 9,683
இந்தியா 6,04,641 17,834
பிரிட்டன் 3,13,483 43,906
பிற நாடுகள் 50,29,538 2,56,860
பாதிப்பு: 1,08,48,352
பலி: 5,19,952
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாா்த்தா கொஸ்டியுக்குக்கு முதல் பட்டம்

இன்றைய ராசி பலன்கள் (03 மே 2026) 12 ராசிகளுக்கும்! ஆரோக்கியம் கூடும் கன்னிக்கு!

தடை நீங்கும் மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

வணிக சிலிண்டா் விலை உயா்வால் முடங்கும் அபாயத்தில் ஜாப் ஆா்டா் தொழில்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


