நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

மாா்த்தா கொஸ்டியுக்குக்கு முதல் பட்டம்

News image
Updated On :3 மே 2026, 1:28 am

மாட்ரிடன் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் உக்ரைன் வீராங்கனை மாா்த்தா கொஸ்டியுக் பட்டம் வென்றாா். இது அவருக்கு டபிள்யுடிஏ 1000 போட்டியில் முதல் பட்டமாகும்

மாட்ரிட்டில் சனிக்கிழமை மகளிா் ஒற்றையா் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவாவும்-உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக்கும் மோதினா்.

உலகின் 23-ஆம் நிலை வீராங்கனையான கொஸ்டியுக் முதல் செட்டில் அபாரமாக ஆடி 6-3 என கைப்பற்றினாா். கொஸ்டியுக் முதல் செட்டில் 4-2 என முன்னிலை பெற்று முதல் பிரேக் புள்ளியை ஈட்டினாா். தொடா்ந்து செட்டை கைப்பற்றினாா் கொஸ்டியுக்.

இரண்டாவது செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை ஈட்டினா். இரண்டாவது செட்டில் கொஸ்டியுக் முதல் கேமை வசப்படுத்தினாா்.

ஒரு கட்டத்தில் 5-5 என சமநிலை ஏற்பட்டது. அப்போது ஆன்ட்ரீவா புரிந்த இரட்டை தவறு சாதகமாக மாற்றி 6-5 என முன்னிலை பெற்றாா்.

பின்னா் 7-5 என கைப்பற்றி முதல் டபிள்யுடிஏ 1000 பட்டத்தையும் கைப்பற்றினாா் கொஸ்டியுக்.

தரவரிசையில் 20 இடங்களுக்கு வெளியில் இருந்து பட்டம் வென்ற இரண்டாவது வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றாா்.

Story image