சீன-இந்திய உறவு இயல்பான பாதைக்குத் திரும்ப வேண்டும்: சீனத் தூதர்

இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வேதுங் 10ஆம் நாள் சீன-இந்திய உறவு பற்றி கானொலி மூலம் உரை நிகழ்த்தினார்.

இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வேதுங் 10ஆம் நாள் சீன-இந்திய உறவு பற்றி கானொலி மூலம் உரை நிகழ்த்தினார்.

இரு நாடுகள் எதிராளிகளுக்குப் பதிலாகக் கூட்டாளிகளாக இருக்க வேண்டும். மோதலுக்குப் பதிலாக அமைதி வேண்டும். ஒருவருக்கு ஒருவர் சந்தைகம் என்ற நிலைமைக்குப் பதிலாக நம்பிக்கை வழங்க வேண்டும். இரு நாட்டுறவு பின்னடைவதற்குப் பதிலாக முன்னேற வேண்டும் என்று அவர் கருத்துக்களை விவரித்தார்.

இரு நாட்டு எல்லை பிரச்னை பற்றி கூறுகையில்..

இது வரலாறு விட்டுச் சென்ற மிகவும் உணர்வலை தன்மை வாய்ந்த பிரச்னையாகும் என்று அவர் தெரிவித்தார். இரு தரப்புகளால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு முறை கண்டறியப்படுவதற்கு முன், கூட்டு முயற்சி மூலம் எல்லைப் பிரதேசத்தின் அமைதியைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய சீன-இந்திய பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு இந்தியாவில் செல்லிடபேசி, வீட்டுப்பயன்பாட்டு மின் சாதனங்கள், அடிப்படை வசதிகள், உந்துவண்டி உற்பத்தி முதலிய தொழில் துறைகளை விரைவுப்படுத்தி வருகிறது. தவிரவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், தன்னார்வப் பாதுகாப்பு, வரியல்லாத தடை நடவடிக்கைகள், சீனா விலக்கு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொண்டால், சீனாவின் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும். இது மட்டுமல்லாமல், வேலை வாய்ப்புகளை இழைக்கும் இந்தியத் தொழிலாளர்களையும், உரிய உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவையை இழைக்கும் இந்திய நுகர்வோர்களையும் பாதிப்பது உறுதி.

சீன-இந்திய தூதாண்மை உறவின் 70ஆவது ஆண்டு நிறைவு வரவுள்ளது. சிக்கலான உணர்வலைத் தன்மை மிக்க பிரச்னைகளை உரிய முறையில் கையாண்டால், தற்போதைய அறைக்கூவல்களை இரு நாடுகளும் சமாளிக்க முடியும். இரு நாட்டுறவு விரைவில் இயல்பான பாதைக்குத் திரும்ப வேண்டும் என்று தூதர் சுன் வேதுங் விருப்பம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com