கடந்த 120 நாள்களாக கரோனா காரணமாக பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்திவந்த நேபாளம், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் விலக்கிக் கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க உலக நாடுகள் பொது முடக்கத்தை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.
கடந்த மார்ச் 24 ஆம் தேதி தலைநகர் காத்மண்டுவில் பதிவான முதல் கரோனா பாதிப்பையடுத்து அந்நாட்டு அரசு பொது முடக்கத்தை அறிவித்தது.
பொதுமுடக்க நீக்கமானது, கல்வி நிறுவனங்கள், பொதுக்கூட்டங்கள், கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் கூடும் மத வழிபாட்டு இடங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு இடமளிக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை 30 முதல் சுற்றுலா சார்ந்த நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீண்டகால கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் 4 மாத காலத்தை கடந்த நிலையில் தற்போது நேபாளத்தில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


