டிரம்ப் வைரஸ்: நான்சி பெலோசியின் குற்றச்சாட்டு
அமெரிக்க பிரதிநிதிகள் அவைத்தலைவரான நான்சி பெலோசி அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் ஜூலை 21 ஆம் நாள் மீண்டும் வார்த்தைப் போரைத் தொடங்கியுள்ளார்.


அமெரிக்க பிரதிநிதிகள் அவைத்தலைவரான நான்சி பெலோசி அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் ஜூலை 21 ஆம் நாள் மீண்டும் வார்த்தைப் போரைத் தொடங்கியுள்ளார்.
கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் டிரம்பின் எதிர்வினையையும் முயற்சியையும் குறைகூறிய அவர், கரோனா வைரசை ‘’டிரம்ப் வைரஸ்’’ எனக்கூறி அரசுத் தலைவரை விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் சி என் என் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அவர், கரோனா பெருந்தொற்று விவகாரத்தில் அமெரிக்க அரசுத்தலைவரின் செயல்பாடுகள் குறைவானதும் தாமதமானதுமானவை எனச் சுட்டிக் காட்டனார்.
கரோனா வைரசை ‘’டிரம்ப் வைரஸ்’’ எனப் பலமுறை குறிப்பிட்ட அவர், அரசுத் தலைவர் செல்லும் இடங்களிலெல்லாம் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்குப் பதிலாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள் என்பதை வலியுறுத்திச் சொல்லி இருப்பாரேயானால், கூடுதலான மக்கள் அவர் தலைமையை ஏற்றுக் கொண்டிருப்பர் என்று தெரிவித்த அவர், ஆனால் அரசுத்தலைவராக இருக்கும் டிரம்பே முகக் கவசம் அணியாமல் இருந்ததன் வழி மக்களுக்குத் தவறான முன்னுதாரணம் ஆகிவிட்டார் என்று குற்றஞ்சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...