மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

துருக்கியில் சமூக வலைதளங்களைக் கண்காணிக்க தனிச்சட்டம் 

துருக்கியில் சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க பிறப்பிக்கப்பட்ட தனிச்சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

News image
துருக்கியில் சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க தனிச்சட்டம்
Updated On :29 ஜூலை 2020, 11:09 am

DIN

துருக்கியில் சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க பிறப்பிக்கப்பட்ட தனிச்சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களின் தனிப்பக்கக் கணக்குகளாக பல்வேறு சமூகவலைதளங்கள் உள்ளன. தாங்கள் விரும்பும் கருத்துக்களை பதியும் தளமாக சமூக வலைதளங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் துருக்கியில் சமூக வலைத்தளங்களில் பதியப்படும் கருத்துக்களை தணிக்கை செய்யும் தனிச்சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இச்சட்டத்தின்படி பல்வேறு நாடுகளின் சமூக வலைத்தள நிறுவனங்கள் தங்களது செயலியின் பயனாளர்களின் உள்ளடக்கம் குறித்து தணிக்கை செய்ய துருக்கியில் உள்நாட்டு பிரதிநிதிகளை கொண்ட குழுவை அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
துருக்கியின் இந்த நடவடிக்கைக் குறித்துப் பேசிய ஆளும்கட்சி உறுப்பினர் ருமேசா கடக், “இந்த சட்டத்தின் மூலம் சமூக வலைத்தளங்களினால் நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளை கட்டுப்படுத்துவது சாத்தியமாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.

8.3 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட துருக்கியில் 5.4 கோடி மக்கள் சமூக வலைதளத்தில் உள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.