/

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,509 பேருக்குத் தொற்று

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,509 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

News image

Russia registers 5,509 COVID-19 cases in past 24 hours

Updated On :30 ஜூலை 2020, 11:13 am

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,509 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

84 மாகாணங்களில் ஒரேநாளில் 5,509 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு 8,34,499 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 129 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 13,802 ஆக உயர்ந்துள்ளது.

நோய் பாதித்து ஒரே நாளில் 9,322 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,29,655 ஆக உள்ளது.

இதுவரை ரஷியாவில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். மேலும் 2,61,000க்கும் மேற்பட்டோர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.