இயல்பு நிலைக்குத் திரும்புமா விமானப் போக்குவரத்து: சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தகவல்
உலக அளவில் 2024ஆம் ஆண்டில் தான் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.


உலக அளவில் 2024ஆம் ஆண்டில் தான் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் பொதுமுடக்கத்தை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. வைரஸ் பரவலைத்தடுக்கும் விதமாக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது இந்தியாவைப் பொறுத்தவரையில் கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமானப் போக்குவரத்து குறைந்த அளவில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம், உலக அளவில் விமானப் போக்குவரத்தானது 2024ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனத் தெரிவித்துள்ளது.
தற்போதைய கணிப்பின்படி கரோனா பொதுமுடத்தால் 2020ஆம் ஆண்டில் 55 சதவிகிதத்திலான விமானப் போக்குவரத்து சேவை பாதிப்படையும் என இந்த அமைப்பு கணித்துள்ளது. ஏப்ரல் மாதக் கணிப்பில் 46% மட்டுமே நடப்பாண்டு விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...