கொவைட்-19 தொற்றைச் சமாளிக்கும் உலக ஒத்துழைப்பில் சீனா பங்களிப்பு

கொவைட்-19 தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச ஒத்துழைப்பு பற்றி சீனாவின்

கொவைட்-19 தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச ஒத்துழைப்பு பற்றி சீனாவின் கருத்து, நடவடிக்கை மற்றும் ஆலோசனை ஆகியவை, சமீபத்தில் சீன அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அறிக்கையில், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புடன் செயல்படுவது, சர்வதேச சமூகம் தொற்று நோயைத் தோற்கடிப்பதற்கு மிக வலிமையான ஆயுதமாகும் என்ற கருத்தைச் சீனா எப்போதும் ஆலோசித்து வருகிறது.

மே 31-ம் தேதி வரை, 27 நாடுகளுக்கு 29 மருத்துவ வல்லூநர் குழுக்களை சீனா அனுப்பியதோடு, 150 நாடுகள் மற்றும் 4 சர்வதேச அமைப்புகளுக்கு உதவி வழங்கியுள்ளது. மேலும், 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு நோய் தடுப்புப் பொருட்களையும் சீனா ஏற்றுமதி செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னேற்றப் போக்கில்,  சீனாவுக்கும் நட்பு நாடுகளுக்கும் இடையே தொடர்பு மேலும் நெருக்கமாகியுள்ளது. சீனாவின் உதவி நடவடிக்கைகள் மீதான அவதூறுகளும், சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி உறவைச் சீர்குலைக்க விரும்பியவர்களின் வதந்திகளும் எண்ணங்களும் இறுதியில் தோல்வியில் முடிந்தன! 

உலகளவில் தொடர்ந்து பரவி வரும் கொவைட்-19 தொற்று நோயை, அடுத்த கட்டத்தில் சமாளிப்பது எப்படி? என்ற கேள்விக்கு பதிலாக,  தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான கூட்டு முயற்சி எடுத்து, சர்வதேச ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும் என்று சீனா ஆலோசித்துள்ளது. குறிப்பாக,  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, உலகிற்கு பொதுவானதாக வழங்கப்படும் என்று சீனா வாக்குறுதி அளித்துள்ளது.

எதிர்காலத்தில் பெறப்போகும் வெற்றியோ அல்லது தோல்வியோ, இன்று காணப்படும் செயல்களைச் சார்ந்திருக்கும். எனவே, தற்போது கொவைட்-19 தொற்று நோய் இன்னும் உலகளவில் பரவி வரும் சூழலில், உலக தொற்று நோயை எதிர்த்து போராடுவதே,  உலக பொதுச் சுகாதார பாதுகாப்புக்கும், உலகின் செழுமை மற்றும் வளர்ச்சிக்கும் முக்கியமானது என்று இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com