மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 450 பேர் பலி

அமெரிக்காவில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,10,932 ஆக அதிகரித்துள்ளது. 

News image
Updated On :9 ஜூன் 2020, 5:56 am

DIN

அமெரிக்காவில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,10,932 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 450 பேர் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தரவுகளை அந்நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 450 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு 1,10,932 ஆக அதிகரித்துள்ளது. 

அங்கு இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 19,56,527 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 7.73 லட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.