மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஜெர்மனியில் மேலும் 318 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,84,861 ஆக உயர்வு!

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 318 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 

News image
Updated On :10 ஜூன் 2020, 6:27 am

DIN

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 318 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனி தற்போது 9ஆம் இடத்தில் உள்ளது. எனினும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே இங்கு கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகபட்சமாக ஒருநாளில் 6,174 பேருக்கு கரோனா தொற்று  இருந்த நிலையில் நேற்று ஒருநாள் பாதிப்பு வெறும் 252 ஆகும். 

தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 318 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,84,861 ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோன்று ஜெர்மனியில் இறப்பு விகிதமும் மிகவும் குறைவாகவே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்தமாக 8,729 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்நாட்டில் சுமார் 1.69 லட்சம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

அந்நாட்டின் தொற்று நோய்கள் குறித்த தரவுகளை அளிக்கும் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்.கே.ஐ) மேற்குறிப்பிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.