மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரஷியாவில் கரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது! நேற்று மட்டும் 8,404 பேருக்கு தொற்று

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,404 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 4,93,657 ஆக அதிகரித்துள்ளது. 

News image
Updated On :10 ஜூன் 2020, 1:37 pm

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,404 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 4,93,657 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா மற்றும் பிரேசிலைத் தொடர்ந்து, ரஷியா 3 ஆம் இடத்தில் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் பேர் வரையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,404 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 4,93,657 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 216 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு 6,358 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 2,52,783 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.