/

ஸ்பெயினில் 2-வது நாளாக புதிய இறப்புகள் இல்லை: சுகாதார அமைச்சகம்

ஸ்பெயினில் கடந்த இரண்டு நாள்களாக புதிய இறப்புகள் எதுவும் இல்லை என்று அந்த நாட்டு சுகாதாரம் அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. 

News image
Updated On :10 ஜூன் 2020, 6:30 am

ஸ்பெயினில் கடந்த இரண்டு நாள்களாக புதிய இறப்புகள் எதுவும் இல்லை என்று அந்த நாட்டு சுகாதாரம் அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை தகவலின்படி, 

ஸ்பெயினில் இதுவரை 27,136 பேர் கரோனா நோய்த் தொற்றுக்கு இறந்துள்ளனர். ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் புதிதாக யாரும் கரோனாவுக்கு பலியாகவில்லை. மேலும், கடந்த ஏழு நாள்களில் 50 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்ததாகவும், அவர்களில் 23 பேர் மாட்ரிட் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

செவ்வாயன்று பி.சி.ஆர் நடத்திய சோதனையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது. புதிதாக 84 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்திற்கு முன்னர் 48 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஏழு நாட்களில் ஸ்பெயினில் தீவிர சிகிச்சை பிரிவில் 12 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை ஸ்பெயினில் மொத்தம் 2,41,966 பேர் நோய்த்தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.