நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிங்கப்பூரில் புதிதாக 463 பேருக்கு கரோனா; பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்குகிறது!

சிங்கப்பூரில் புதிதாக 463 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2020, 9:50 am

DIN

சிங்கப்பூரில் புதிதாக 463 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: 

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 463 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 8 பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து பணிக்காக வந்தவர்கள். சமூகப் பரவலால் 18 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,850 ஆக அதிகரித்துள்ளது. 

பலியானோரின் எண்ணிக்கை 25 ஆக உள்ளது. இதுவரை 27,286 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.