42 ஆயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை; இரண்டாம் இடத்தில் பிரேசில்

42 ஆயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை; இரண்டாம் இடத்தில் பிரேசில்

கரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் பிரேசில் நாட்டில், தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தொடும் நிலை ஏற்பட்டுள்ளது.
Published on


கரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் பிரேசில் நாட்டில், தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தொடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி பிரேசிலில் கரோனா பாதித்து 41,900 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உலகளவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை ஒரே நாளில் பிரேசிலில் 909 பேர் பலியாகியுள்ளதாகவும் பிரேசில் நல்வாழவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரேசிலில் இதுவரை 8,29,900 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பிலும் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. உயிரிழப்பில் 41,481 உயிர் பலியுடன் இதுவரை இரண்டாவது இடத்தில் இருந்த பிரிட்டன், தற்போது மூன்றாவது இடத்துக்குச் சென்றுள்ளது.

உயிரிழப்பில் அதிர்ஷ்டவசமாக இந்தியா தற்போது 9வது இடத்தில் இருப்பதும், கரோனா பாதிப்பில் இந்தியா 3.09 லட்சம் பாதிப்புகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com