தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சீனப் பொருளாதாரத்துடன் தொடர்புகொள்ள விரும்பும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள்

கொவைட் 19 நோய் பரவலின் பாதிப்பினால், உலகப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத் துறையில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

News image
Updated On :16 ஜூன் 2020, 9:46 am

DIN

கொவைட் 19 நோய் பரவலின் பாதிப்பினால், உலகப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத் துறையில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. சீனப் பொருளாதார இணைப்பிலிருந்து பிரிந்து செல்ல விரும்புவதாக சிலர் கருத்து தெரிவித்தனர்.

நியூயார்க் டைம்ஸ் எனும் அமெரிக்க செய்தித்தாள் 15ஆம் நாள் வெளியிட்ட கட்டுரையில், உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் காப்பதற்கு சீனாவின் பொருளாதாரத் திறமை கடைசி வாய்ப்பு என்றும், பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் சீனப் பொருளாதாரத்துடனான தொடர்பைத் துண்டிக்க விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டு பொருளாதார அதிகரிப்பைக் காணும் சில நாடுகளில் சீனா ஒன்றாக இருக்கும். ஜப்பானில் உள்ள கோல்ட்மேன் சக்ஸ் குழுமத்தின் ஜப்பானிய பங்கு துறை ஆலோசகர் கேத்தி மட்சுயி கூறுகையில், உலகில் உள்ள நாடுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன. சீனப் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான அதிகரிப்பு, உலகில் ஏறக்குறைய அனைத்து பொருளாதார வல்லரசுகளுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடக குழுமம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.