அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு
அமெரிக்காவின் பல மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.


அமெரிக்காவின் பல மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அமெரிக்காவின் சி என் என் நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த சில வாரங்களில் அந்நாட்டின் 21 மாநிலங்களில் வைரஸ் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், 8 மாநிலங்களின் நிலைமை நிதானமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பொருளாதார மீட்சிப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது கட்டம் வரக் கூடுமென நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இது பற்றி நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர் பால் எம். ரோமெர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியளிக்கையில், கரோனா வைரஸைத் தடுப்பதில் சீனாவின் வூஹான் நகர் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா கற்றுக்கொள்ள வேண்டும். வைரஸுக்கான தடுப்பூசியைக் கண்டறியும் முன், பரிசோதனை பணிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
சீனாவின் வூஹான் நகரில் மேற்கொள்ளப்பட்ட பெருமளவிலான பரிசோதனைகள் காரணமாக வூஹான் நகரவாசிகள் நலன் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...