அமெரிக்க அரசியல்வாதிகளின் பொய் கூற்றை உடைக்கும் செழுமையான சின்ச்சியாங்

அண்மையில் அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 2020ஆம் ஆண்டின் உய்கூர் மனித உரிமை கொள்கை மசோதாவில், தீய நோக்கத்துடன் சீனாவின் சின்ச்சியாங்கின் மனித உரிமை நிலை..
அமெரிக்க அரசியல்வாதிகளின் பொய் கூற்றை உடைக்கும் செழுமையான சின்ச்சியாங்
Published on
Updated on
1 min read

அண்மையில் அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 2020ஆம் ஆண்டின் உய்கூர் மனித உரிமை கொள்கை மசோதாவில், தீய நோக்கத்துடன் சீனாவின் சின்ச்சியாங்கின் மனித உரிமை நிலை மற்றும் சீன அரசின் கொள்கை மீது அவதூறு பரப்பப்பட்டுள்ளது. இது குறித்து, சீன மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, உலகளவிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக சின்ச்சியாங் பிரதேசத்தில் வன்முறை மற்றும் பயங்கரவாதச் சம்பவம் எதுவும் நிகழவில்லை. இது மட்டுமல்ல, இப்பிரதேசத்தில் மொத்த உற்பத்தி மதிப்பு ஆண்டுக்கு 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. வறுமையினால் ஏற்பட்ட பாதிகப்பு விகிதம், 2013ஆம் ஆண்டின் இறுதியில் இருந்த 19.4 சதவீதத்தில் இருந்து, 2019ஆம் ஆண்டின் இறுதியில் 1.24 சதவீதமாகக் குறைந்தது.

அதே சமயம் சிறப்பு வாய்ந்த சின்ச்சியாங் பண்பாடும் மதமும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உய்கூர் இன மொழியும் எழுத்தும் சின்ச்சியாங்கின் நீதி, கல்வி, ஊடகம் உள்ளிட்ட பல துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பொது மக்களின் வாழ்க்கை அமைதியாகவும் நிதானமாகவும் உள்ள செழுமையான சின்ச்சியாங் பிரதேசத்துக்கு முன், அமெரிக்காவின் பொய் கூற்று தானாக உடைந்து விட்டது.

பொய் என்பது வெறும் பொய். நியாயம் தான் மக்களின் மனதில் பதிந்துள்ளது. கட்டுக்கதை கூறி அமெரிக்க அரசியல்வாதிகள் உலகளவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அவர்கள் பயங்கரவாதிகளுடன் இருக்க விரும்புவார்களா?

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com