

சிங்கப்பூரில் புதிதாக 218 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 218 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு சமூகப் பரவலால் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன் மூலமாக நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,313 ஆக அதிகரித்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. இதுவரை 34,942 பேர் குணமடைந்துள்ளனர்.
சிங்கப்பூரில் நாள் ஒன்றுக்கு சராசரியாக பாதிப்பு 400 என்ற அளவில் இருந்த நிலையில், ஒரு சில வாரங்களாக பாதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.