தொழில்நுட்ப ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தி வரும் சீனாவின் புவியிடங்காட்டித் திட்டம்

சீனாவிற்கு சொந்தமான பெய்டோ எனும் புவியிடங்காட்டி செயற்கைக் கோள் அமைப்பின் 3ஆவது கட்டத் திட்டத்தின் கடைசி செயற்கைக்கோள் ஒன்று, 23ஆம் நாள் செவ்வாய்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
தொழில்நுட்ப ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தி வரும் சீனாவின் புவியிடங்காட்டித் திட்டம்

சீனாவிற்கு சொந்தமான பெய்டோ எனும் புவியிடங்காட்டி செயற்கைக் கோள் அமைப்பின் 3ஆவது கட்டத் திட்டத்தின் கடைசி செயற்கைக்கோள் ஒன்று, 23ஆம் நாள் செவ்வாய்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இதையடுத்து, விரைவில் இந்த புவியிடங்காட்டி அமைப்பின் உலகச் சேவை தொடங்கபடும் என தெரிகிறது.

இது, சீன விண்வெளித் துறை உள்ளிட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாகும். உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அறிவியல் தொழில் நுட்பம் ரீதியிலான ஆதாரம் அளிப்பதாகவும், வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான புதிய உந்து சக்தியை அளிப்பதாகவும் இது அமையும்.

குறிப்பாக, பெய்டோ அமைப்பின் கட்டுமானானது, சீனா சொந்தமாக ஆராய்ச்சி  மற்றும் புத்தாக்கம் செய்யும் திறமையைக் காட்டுகிறது. அதேவேளையில்,  இதில் வெளித் திறப்பு மற்றும் ஒத்துழைப்பு என்ற கண்ணோட்டத்தையும்  உணர்ந்து கொள்ளலாம்.

இதுவரை, உலகின் முக்கிய 3 புவியிடங்காட்டி அமைப்புகளுக்கும் பெய்டோவுக்கும் இரு தரப்பு ஒத்துழைப்பு முறைமை உருவானது. தவிர, ஆசியான், கடல் மற்றும் தரை வழிப் பட்டுப் பாதைகளிலுள்ள நாடுகள் உள்ளிட்ட பன்னாட்டு சமூகத்துடன்,  தொழில் நுட்பம், தயாரிப்பு மற்றும் பயன்பாட்டுச் சாதனைகள் ஆகியவற்றையும் சீனா பகிர்ந்து கொண்டு வருகிறது.

உலகிற்கு பொது சேவை வழங்கும் முதலாவது விண்வெளி வகையான அடிப்படை வசதியாக பெய்டோ அமைப்பு விளங்கும். இந்நிலையில், பன்னாடுகளின் சமூக வளர்ச்சி, பேரிடர் மீட்புதவி ஆகியவற்றுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, உலகின் 50 சதவீத நாடுகள், பெய்டோ அமைப்பைப் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இவ்வமைப்பு, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் வகையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். உலக நாடுகளுடன் சீனா பகிர்ந்து கொள்ள விரும்பும் தரமான தொழில் நுட்ப அடையாளச் சின்னமாக பெய்டோ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:  சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com