புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கராச்சியில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு

பாகிஸ்தானில் அடுக்குமாடி குடியிருப்பு வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :6 மார்ச் 2020, 4:26 am

DIN

பாகிஸ்தானில் அடுக்குமாடி குடியிருப்பு வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள குல்பஹார் பகுதியில் 5 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு நேற்று இடிந்து விழுந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 

இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 14ஆக உயர்ந்துள்ளது. மேலும் 17 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க கராச்சி மேயர் வாசிம் அக்தர் உத்தரவிட்டார். இதனிடையே இடிந்து விழுந்த கட்டடத்தின் கட்டுமானம் குறித்த விரிவான அறிக்கையை வழங்க சிந்து மாகாண முதல்வர் சையத் முராத் அலி ஷா உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.