

புது தில்லி: இந்தியாவைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு மென்பொருள் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, கரோனா பாதித்துள்ள நாடுகளுக்கு தனது இணைய பாதுகாப்பு மென்பொருள்களை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.
K7 கம்ப்யூடிங் என்பது இந்தியாவைச் சேர்ந்த பிரபலமான உள்நாட்டு இணைய பாதுகாப்பு மென்பொருள் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கணினி , மொபைல் மற்றும் சிறு நிறுவனங்களுக்கான ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ பாதுகாப்பு மென்பொருள்களைதயாரித்து விநியோகித்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு கடந்த மாதம் 2 ஆம் தேதி முதல் இந்த மாதம் 25-ஆம் தேதி வரை நடத்திய உலகளாவிய ஆராய்சிகளில், உலக அளவில் நடைபெறும் இணையத் தாக்குதலகள் 30% அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அதிலும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் இத்தகைய மோசடிகளும் உலகின் பல நாடுகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் K7 நிறுவனமானது தனது இணைய பாதுகாப்பு மென்பொருள்களை, கரோனா பாதித்துள்ள நாடுகளுக்கு அவை விரும்பும்வரை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் நிறுவனர் கேசவர்தனன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.