ரஷியாவில் ஒரேநாளில் 11,012 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்தது!
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,012 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.


ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,012 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
ரஷியாவில் தொடர்ந்து 8 ஆவது நாளாக, நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்தைத் கடந்த நிலையில் அங்கு கரோனா பாதிப்பு உள்ளது. கடந்த 8 ஆம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 11,231 தொற்று உறுதி ஆனது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 11,012 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2,09,688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு 1,915 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்த்தில் 34,306 பேர் மட்டுமே முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 5-ஆவது நாடாக ரஷியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...