ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,598 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த இரு வாரங்களாக நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்த நிலையில் உள்ளது. கடந்த 11 ஆம் தேதி 11,656 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதே ஒருநாளில் அதிகபட்ச பாதிப்பாகும்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 10,598 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 2,62,843 ஆக உயர்ந்துள்ளது.
ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு 2,418 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 113 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரத்தில் 58 ஆயிரம் பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியா 3 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் ஸ்பெயினும் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


