விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 820 பேர் உயிரிழப்பு; பலி 90 ஆயிரத்தை நெருங்குகிறது!

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 820 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :18 மே 2020, 5:54 am

DIN

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 820 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் குறித்த தரவுகளை அந்நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 820 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு 90 ஆயிரத்தை நெருங்குகிறது. 

அங்கு இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 14,86,376 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 3,46,389 பேர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.