சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கொவைட்-19 தடுப்பூசிக்கானமருத்துவ ரீதியிலான ஆய்வில் பயனுள்ள முடிவு!

கொவைட்-19 நோய்த் தொற்று தடுப்பூசிக்கான மருத்துவ ரீதியிலான ஆய்வு முடிவு 22ஆம் நாள் பிரிட்டனின்  தி லான்செட் எனும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :23 மே 2020, 9:18 am

DIN

கொவைட்-19 நோய்த் தொற்று தடுப்பூசிக்கான மருத்துவ ரீதியிலான ஆய்வு முடிவு 22ஆம் நாள் பிரிட்டனின்  தி லான்செட் எனும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், சீன ஆய்வுக் குழு உருவாக்கிய தடுப்பூசியின் முதல் கட்டச் சோதனை பாதுகாப்பானது என்பதையும் மனித உடலில் இந்த தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருவதையும் ஆய்வு முடிவு எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ ரீதியிலான சோதனையில், 108 தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டப் பிறகு, 14 நாட்களுக்குள் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. 28 நாட்களுக்குப் பிறகு, கடுமையான பக்க விளைவுகள் ஏற்படவில்லை. எனவே, இந்த ஆய்வு முடிவு  முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது என்று இந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

Story image

அதேசமயம், இந்தச் சோதனையில், மாதிரிகளின் எண்ணிக்கை குறைவாகவும் சோதனை நேரம் குறுகியதகாவும் இருந்தன. எனவே, அடுத்தக் கட்டம், மேலதிக சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவைட்-19 தொற்று நோய் பரவலைத் தடுத்து நிறுத்தும் வகையில் உரிய தடுப்பூசி கண்டுபிடிப்பது ஒன்றே, நீண்டகால தீர்வு வழிமுறையாகும். மேலும், தற்போது, உலகளவில் 100க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருவதாக, தி லான்செட் தெரிவித்துள்ளது.

தகவல்:  சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.