தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

ஆப்கனில் 42 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

ஆப்கனில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

News image

கோப்புப் படம்.

Updated On :7 நவம்பர் 2020, 10:31 am

ஆப்கனில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 58 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.  இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,033ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,556ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவிலிருந்து 34,446 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

அதேநேரத்தில் பிப்ரவரி மாதத்திலிருந்து நாட்டில் இதுவரை 1,25,112 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.