புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களால் கடந்த 3 மாதத்தில் 50% வன்முறை

ஆப்கானிஸ்தானில் கடந்த 3 மாதங்களில் 50 சதவிகிதம் வன்முறை தலிபான் அமைப்பினரால் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

News image

ஆப்கன்: தாலிபன்களால் கடந்த 3 மாதத்தில் 50% வன்முறை (கோப்புப்படம்)

Updated On :8 நவம்பர் 2020, 8:27 am

DIN

ஆப்கானிஸ்தானில் கடந்த 3 மாதங்களில் 50 சதவிகிதம் வன்முறை தலிபான் அமைப்பினரால் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் புனரமைப்புக்கான சிறப்பு ஆய்வாளர் தலிபான் தாக்குதல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்துள்ளார். அதில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் ஆகிய மாதங்களில் நடைபெற்ற தலிபான் தாக்குதல் குறித்து ஆய்வுகள் அடங்கியுள்ளன.

தலிபான்களின் தொடர்ச்சியான வன்முறை ஆப்கானிய சமாதான முன்னெடுப்புகளுக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளதாக 
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் தளபதி ஸ்காட் மில்லர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு உத்தரவாதங்கள் மற்றும் தலிபான் வன்முறையை குறைத்தல் போன்றவை அமெரிக்க அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

காபூல் அரசாங்கத்தை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற அமைதிக்கு பிந்தைய காலத்தில் ஆப்கான் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவளிப்பது முக்கியமானது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு எதிரான வன்முறைகளை அதிகரித்துள்ளதாகவும், மக்களுக்கு எதிரான வன்முறைகளில் தலிபான்களே முக்கிய குற்றவாளிகள் என்றும் அந்தநாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தாரிக் ஆர்யன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.