சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஈரானில் புதிய உச்சம்: ஒரேநாளில் 10,463 பேருக்கு கரோனா

​ஈரானில் புதிய உச்சமாக ஒரேநாளில் புதிதாக 10,463 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :9 நவம்பர் 2020, 3:42 pm


ஈரானில் புதிய உச்சமாக ஒரேநாளில் புதிதாக 10,463 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,92,949 ஆக உயர்ந்துள்ளது.

இதுபற்றி செய்தியாளர்களைச் சந்தித்த ஈரான் சுகாதார மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 3,574 பேருக்கு மருத்துவமனை உதவி தேவைப்படுகிறது என்றார்.

ஞாயிறு மற்றும் திங்கள் இடையே மேலும் 458 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 38,749 ஆக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

திங்கள்கிழமை நிலவரப்படி, 5,25,641 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.