ஜோ பைடன் வெற்றியை முதன்முறையாக ஒப்புக்கொண்ட டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை முதன்முறையாக ஒப்புக்கொண்ட அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தத் தேர்தலை முறைகேடானது எனக் குறிப்பிட்டு விமரிசனம் செய்துள்ளார்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை முதன்முறையாக ஒப்புக்கொண்ட அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தத் தேர்தலை முறைகேடானது எனக் குறிப்பிட்டு விமரிசனம் செய்துள்ளார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"தேர்தல் முறைகேட்டால் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். கண்காணிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தீவிர இடதுசாரி தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான டொனினியன் அட்டவணைப்படுத்தியுள்ள வாக்குகளை வைத்து டெக்ஸாஸுக்குக் (அங்கு நான் பன்மடங்கு வித்தியாசத்தில் வென்றுள்ளேன்) கூட தகுதி பெற முடியாது."
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தொடர்ச்சியாக தோல்வியை ஏற்க மறுத்து வந்தார். இந்த நிலையில், மோசடி என்று குறிப்பிட்டாலும் முதன்முறையாக பைடன் வெற்றியை ஒப்புக்கொண்டுள்ளார் டிரம்ப்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...