அமெரிக்காவில் புதிய உச்சத்தில் தினசரி கரோனா பாதிப்பு
அமெரிக்காவில் தொற்று பரவ தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரமாக தினசரி கரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் மேல் அதிகரித்து வருவது அமெரிக்க வாழ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


வாஷிங்டன்: அமெரிக்காவில் தொற்று பரவ தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரமாக தினசரி கரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் மேல் அதிகரித்து வருவது அமெரிக்க வாழ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்காத நிலையில், டிசம்பர் மாத தொடக்கத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக ஒருநாள் சராசரி பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாக இருந்து வருவது அமெரிக்க வாழ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் புதிதாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருதால் அங்கு மருத்துவ சிகிச்சைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,12,26,038 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புக்கு 2,51,256 பேர் உயிரிழந்துள்ளனர், தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 40,83,767 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து 68,91,015 பேர் குணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...