92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தேர்தலில் நானே வெற்றி: டிரம்ப்

​அமெரிக்க அதிபர் தேர்தலில் தானே வெற்றி பெற்றதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை பதிவிட்டார்.

News image

கோப்புப்படம்

Updated On :16 நவம்பர் 2020, 3:15 pm

DIN


அமெரிக்க அதிபர் தேர்தலில் தானே வெற்றி பெற்றதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை பதிவிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பெரும்பான்மை பெற்றுவிட்டதாக ஊடகங்கள் கணித்துள்ளன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறார். 

தேர்தல் மோசடி மூலம் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டார். இது, பைடனின் வெற்றியை முதன்முதலாக டிரம்ப் ஒப்புக்கொண்டதுபோல் தோற்றமளித்தது. 

இந்த நிலையில், தேர்தலில் தானே வெற்றி பெற்றதாக டிரம்ப் சுட்டுரைப் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.