சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

அமெரிக்காவில் 2,50,000-ஐ தாண்டியது கரோனா பலி

அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 2,50,000-ஐ தாண்டியுள்ளது. 

News image

கோப்புப் படம்.

Updated On :19 நவம்பர் 2020, 3:20 pm

அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 2,50,000-ஐ தாண்டியுள்ளது. 

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பரபரப்புக்கு இடையே, கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக அந்த நாட்டின் தினசரி கரோனா பாதிப்பு, மீண்டும் மீண்டும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. பல மாதங்களுக்கு முன்னரே மருத்துவ நிபுணர்கள் எச்சரித்ததைப் போல, அந்த நாட்டில் மூன்றாவது கரோனா அலை எழுந்துள்ளது. 

தினமும் லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 2,50,000-ஐ தாண்டியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,707 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 2,56,254 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்புப் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.